Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வல்வெட்டித்துறை சந்தியில் புத்தர்சிலை : தொடரும் சிங்கள பௌத்தமயமாக்கல்

யாழ்-பருத்தித்துறை வீதி பருத்தித்துறை-தொண்டமனாறு வீதி ஆகியவை சந்திக்கும் வல்வெட்டித்துறை சந்தியினிலேயே படையினர் முகாமிட்டுள்ளனர். இம்முகாமினுள் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைத்திருக்கும் படையினர் தற்போது முகாமிற்கு வெளியே புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பதாக வீதியோரமாக மற்றொரு விகாரையொன்றினை அமைத்து வருகின்றனர். திட்டமிட்ட வகையினில் அமைக்கப்பட்டுவரும் இவ்விகாரைக்கே கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள் பௌத்த ஆக்கிரமிப்பைத் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டுவரும் இலங்கை சோவனிச அரசு தனது தேசிய இன முரண்பாட்டைத் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தி வருகிறது.
இதேவேளை, வல்வெட்டித்துறை துணைத் தலைவர் பதவியிலிருந்து சிவாஜிலிங்கம் விலகியுள்ளார்.

Exit mobile version