Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வல்லரசின் உள்ளே பட்டினிக் குழந்தைகள்:அதிர்ச்சித் தகவல்கள்

schoolsNational Association of Schoolmasters Union of Women Teachers என்ற தொழிற்சங்கம் நடத்திய ஆய்வில் 25 வீதமான பிரித்தானிய ஆசிரியர்கள் பசிக்கும் மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக வீட்ட்டிலிரிந்து உணவு எடுத்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் வறுமை அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரிக்க உழைப்போரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் பல குடும்பங்கள் தமது குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 4000 ஆசிரியர்களுடன் நடத்திய கருத்துக்கணிப்பில் உணவுப் பஞ்சம் முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். பிரித்தானியப் பிரதமர் டேவிட்கமரனின் தேர்தல் தொகுதியிலிருந்து 15 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு பாடசாலையில் செலவில் காலை உணவு வழங்கப்படாவிட்டால் மதிய உணவு வேளைவரை அவர்கள் பட்டினிகிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தின் தலைவரான ஜேப் பிரானர் தெரிவித்துள்ளார்.

820,000  மாணவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது காலையுணவைத் தவிர்த்தே பள்ளிகளுக்குச் செல்வதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 28 வீதமான ஆசிரியர்களின் கருத்துப்படி பல மாணவர்கள் முதல் நாள் இரவு உணவிலிருந்து வெறும் வயிறோடே பள்ளிகளுக்கு வருகிறார்கள் எனத் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கூடங்கள் இலவசமாகக் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் கல்வி கற்பிக்க இயலாத சூழல் தோன்றும் எனத் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. மூன்றாமுலக நாடுகளில் சுரண்டும் உபரியில் ஒருபகுதியை மேற்கு நாடுகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அரசுகள் முதலிட்டன. இன்று அந்த உபரி உற்பத்தியையும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் அபகரித்துக்கொள்ள ஐரோப்பிய சமூகத்தை வறுமை தின்ன ஆரம்பித்திருக்கிறது.

Exit mobile version