Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வலாற்று உண்மையை இந்த அடக்கு முறையாளர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் : செ.கஜேந்திரன்

கடந்த24-11-2011 அன்று யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள்மாணவர் ஒன்றியக் கட்டடத்தினுள் சென்று மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்புப் பலகையின்கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த அறிவித்தல் பலகையில்மாவீரர்களை நினைவுகூரும் பிரசுரம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அதனை குறித்த நபர்கள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை அனைவரும் அறிந்ததே.

கடந்த25-11-2011 அன்று நள்ளிரவு காரைநகர் பிரதேச சபை தலைவரது வீட்டின் மீது இனந்தெரியாதநபர்களால் பெற்றோல் குண்டுவீசித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காரைநகரில் மாவீரர்வாரகாலமாகிய நவம்பர் 21 – 27 வரையான காலத்தில் ஆலயங்களில் மணி ஒலி எழுப்புவதற்குஇராணுவத்தினர் தடைவிதித்துள்ளமை பற்றியும் இராணுவ அடக்குமுறை பற்றியும் ஆனைமுகன் அவர்கள்பிபிசி தமிழோசைக்கு அம்பலப்படுத்திய அதே தினம் நள்ளிரவு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தஒருவாரத்திற்கு மேலாக பொது மக்கள் எவரும் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்ளக் கூடாதென சிறீலங்காஇராணுவத்தினர் வெளிப்படையாகவே பொது மக்களை அச்சுறுத்திய செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமைஅனைவரும் அறிந்த விடயமாகும். மேற்படி தாக்குதல் சம்பங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணிமிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள சக்திகள் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளுவதன் மூலம்எதனைச் சாதிப்பதற்கு விரும்புகின்றனவோ அதற்குநேரெதிரான விளைவுகள்தான் வந்து முடியும் என்பதனை கடந்த கால வரலாறு உணர்த்தி நிற்கின்றதுஎன்ற வலாற்று உண்மையை இந்த அடக்கு முறையாளர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

செ.கNஐந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
27-11-2011

ஊடகஅறிக்கை

Exit mobile version