கடுமையான பெட்ரோல் சமையல் எரிவாயு விலை உயர்வால் மத்திய தர, ஏழைகள் கடும் திண்டாட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தியா எங்கிலும் மக்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விலைவாசி உயர்வை காங்கிரஸ் கூட்டணி மிகவும் திமிருடன் எதிர்கொண்டு வருகிறது. கனடாவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன். “விலையைக் குறைக்க முடியாது இன்னும் கூட விலையேறலாம்” என்று திமிராக பதிலளித்தார். இந்நிலையில் மாநில அரசுகள்தான் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் விலைவாசியை குறைக்க வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த் போதே கருணாநிதி பேருந்து கட்டணங்காள் உயராது என்று அறிக்கை விட்டார். அதாவது விலைவாசியை குறையுங்கள் என்றால் பேருந்து கட்டணம் உயராது என்கிறார். ஆனால் ஏற்கனவே பேருந்து கட்டணங்கள் ஏழை மக்கள் பயணிப்பதற்கு இயலாத வகையில் உயர்த்தபப்ட்டுள்ளது. எம் சர்வீஸ், இடைநில்லா பேருந்து, ஏசி. பேருந்து என அநியாயமான முறையில் பேருந்து கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் மேலும் பேருந்து கட்டணங்கள் உயராது என்றார் கருணாநிதி. வரியைக் குறையுங்கள் என்ற கோரிக்கை எழ இப்போது வழக்கமாக மற்ற மாநிலங்களில் எவ்வளவு வரி தமிழகத்தில் எவ்வளவு வரி என்று புள்ளிவிபரங்களுக்குள் புகுந்து கபடி ஆடுகிறார். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி எல்லாவற்றிர்கும் நாடக்மாய் ஆடிக் கொண்டிருக்கப் போகிறாரோ தெரியவில்லை. இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை: ஆந்திரத்தில் பெட்ரோலியப் பொருள்களின் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி விகிதத்தைக் குறைக்கப் போவதாக அந்த மாநில அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அதுபற்றி அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப் போவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். ஆந்திரம் இப்போது யோசித்துக் கொண்டிருக்கும் முடிவை தமிழக அரசு, 2006-ம் ஆண்டிலேயே செயல்படுத்தியது. மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திய போது, தமிழகத்தில் டீசலின் மீதான விற்பனை வரி 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதுபோலவே, 2008-ம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவீதத்தில் இருந்து 21.43 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது. அப்போது வேறு எந்த மாநிலமும் தங்கள் மாநிலத்துக்குக் கிடைக்கும் வரியைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதுமாத்திரமல்ல; இப்போது மாநிலங்களுக்குள்ள வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே சென்றால் அது மாநில அரசுகளின் நிதி நிலைமையை மிகவும் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் போது - இப்போது பெட்ரோலிய விலை உயர்வுக்காக போராட்டம் நடத்தப் போகின்ற பாஜக, இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவுக்கு அவர்கள் தாங்கள் வசூலிக்கும் வரியைக் குறைத்துக் கொண்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆந்திரத்தில் பெட்ரோலுக்கு 33 சதவீதமும், டீசலுக்கு 22.25 சதவீதமும் அந்த மாநில அரசு வரி விதிக்கிறது. கர்நாடகத்தில் பெட்ரோலுக்கு நுழைவு வரி உட்பட 30 சதவீதமும், டீசலுக்கு 23 சதவீதமும் உள்ளது. கேரளத்தில் செஸ் உட்பட பெட்ரோலுக்கு 30 சதவீதமும், டீசலுக்கு 25.69 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் கூடுதல் வரியோடு சேர்த்து பெட்ரோலுக்கு 37.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. டீசலுக்கு மகாராஷ்டிரத்தில் 23 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் நுழைவு வரியோடு சேர்த்து 24 சதவீதமும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 சதவீதமும் அந்தந்த மாநில அரசுகளால் வரி வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோலுக்கு 30 சதவீதம் வரியும், டீசலுக்கு 21.43 சதவீதம் வரியும் இப்போது உள்ளது. எனவே, இந்தியாவில் தமிழகத்திலேதான் அதிக வரி வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுவது சரியான தகவல் அல்ல என்பது எல்லோருக்கும் விளங்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.