Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரவு செலவுத் திட்டத்தில் மன்மோகன் சிங்கின் முகமே பெரிதாக தெரிகிறது:இடதுசாரி முன்னணி அறிக்கை .

08.11.2008.

வரவு செலவுத் திட்டத்தில் மன்மோகன் சிங்கின் முகமே பெரிதாக தெரிகிறது. எனவே, இந்திய கருத்தியல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பின்னணியில் உள்ளது.

மகிந்த அரசாங்கம் கையாண்ட யுத்த முன்னெடுப்பால் நாட்டின் பொருளாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களை ஏமாற்ற அரசாங்கம் புதிய நாடகத்தை மேடையேற்ற முயல்கிறது என்று இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் ஏற்றுமதிகள் ஊக்குவிக்கப்பட இருக்கிறது. அதேநேரம் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கைத்தொழில், வியாபார முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தால் ஏற்பட்ட வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள இருந்த எதிர்ப்புகளை குறைப்பதற்காக தொழிலாளர் ஊக்கத்திற்கு சார்பாக சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடரும் யுத்தத்தால் தொழிலாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசாங்கம் முயல்கிறது.

இந்திய, அமெரிக்க இராணுவக் கொள்கை வகுப்பாளர்களால், யுத்தம் முன்னெடுக்கப்படுவதால், பாதுகாப்புச் செலவினத்துக்கு 179 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு கிழக்கில் இந்திய சார்பு பொம்மை ஆட்சிக்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மகிந்த ராஜபக்ஷ பொனபாட் அரசியல் நடிப்பை நடிக்கத் தொடங்கியுள்ளர். மகிந்த நடிப்பில் உள்ள வேறுபாடு என்னவென்றால், பொனபாட் ஆடையுடன் செய்ததை மகிந்த நிர்வாணமாக செய்ய முயல்கிறார் என்றும் இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version