ராஜபக்ச அரசின் பேரினவாத முன்முகமாகத் தொழிற்படும் ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்கள பெளத்த அடிப்படைவாதக் கட்சி வடக்கில் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் சேதப்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக வரலாற்று தளங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மரபுரிமைகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச பேரினவாத அரசு வட – கிழக்கு சிங்கள மக்களின் வரலாற்றுக்கு முந்ததைய பாரம்பரியப் பிரதேசங்கள் என நிறுவும் நோக்கில் திட்டமிட்டுச் செயற்படுகிறது.