வரலாற்றில் முதல் தடவையாக இனக்கொலையாளியுடன் வலம்வரும் வட இந்திய சினிமாக் கூத்தாடிகள்
இனியொரு...
வரலாற்றில் முதல் தடவையாக இந்திய நடிகர்கள் இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொள்கின்றனர். இலங்கை இனக்கொலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காக இந்திய சினிமாக் கூத்தாடிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். இந்திய செய்தி நிறுவனமான PTI வரலாற்றில் முதல் தடவையாக இது நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய சினிமாக் கூத்தாடி சல்மான் கானுடன் இலங்கையில் பிறந்து இந்திய சினிமாவில் கூத்தாடும் ஜக்குலின் பர்னாண்டேஸ் இன்று இலங்கையில் மகிந்த ஆதரவுப் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இவர்களுடன் மேலும் ஐந்து பொலிவூட் நட்சத்திரக் கூத்தாடிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பி.ரி.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி வாழும் சினிமாக் கூத்தாடிகள் பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளமை அப்பாவி மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாசிஸ்டும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து இரத்தம் படிந்த தெருக்களில் உலாவரும் இக் கூத்தாடிகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப இந்தியாவில் எந்த முற்போக்கு ஜனநாயக அமைப்புக்களோடும் தமிழ்த் தலைமைகள் உறவை வளர்த்துக்கொள்ளவில்லை.