Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரலாற்றில் முதல்தடவையாக சூழலை மசுபடுத்தியவர்களைத் தேடும் இன்டட்போல்: தேவா வெளியில்

வரலாற்றில் முதல் தடவையாக இன்டர்போல் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 36 நாடுகளிலிருக்கும் 136 நபர்களை தேடிவருவதாக அறிவித்துள்ளது. 190 நாடுகளை உறுப்பினர்களாகக் interpகொண்ட இன்டர்போல் நிறுவனம், சுற்றுச் சூழலை திட்டமிட்டு மாசடையைச் செய்தமைக்காக இவர்களைத் தேடிவருவதாக அறிவித்துள்ளது.

இவர்களில் 9 குற்றவாளிகள் தப்பியோடியுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது நச்சுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்றியமைக்காக இத்தாலியரான ஆன்ரியோ கியாக்கபோனைத் தேடிவருகிறது.

போபாலில் ஆயிரக்கணக்காவர்களைக் கொன்று குவித்துவிட்டு அமெரிக்காவில் அமைதியாகச் செத்துப்போன அன்டர்சனிலிருந்து மருந்துகளைப் பரிசோதித்துக் குழந்தைகளைக் கொல்லும் பில் கேட்ஸ் வரைக்கும் இன்டர்போல் தண்டிக்கப்போவதில்லை. உலகம் முழுவதும் வளங்களைச் சுரண்டுவதற்காக போர்களையும் படுகொலைகளையும் நடத்தும் பல்தேசிய வியாபார நிறுவனங்களை இன்டர்போல் தண்டிக்கப் போவதில்லை.

பில்கேட்ஸ் உடன் நிர்ஜ் தேவா

பிரித்தானியாவில் ஆளும் கட்சியின் அரசியல்வாதியாக வலம்வரும் இலங்கையைச் சேர்ந்த நிர்ஜ் தேவா யாழ் குடாநாட்டையை நாசப்படுத்தும் வகையில் கழிவுகளை மக்கள் குடியிருப்புக்களைக் கொட்டும் வேலையில் ஈடுபடுவதையும் இன்டர்போல் தண்டிக்கப்போவதில்லை.

யாழ் குடாநாட்டில் சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிரூந்து வெளியேறும் பெருந்தொகையான கழிவு எண்ணையை மக்கள் குடியிருப்புக்களில் செலுத்தி குடிநீரையும் விவசாய நிலத்தையும் நச்சாக்கும் தேவா பிரித்தானிய அரசியலிலும் இலங்கை அரசியலிலும் அதிகாரத் தரகர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை நஞ்ச்சாக்கும் நிறுவனத்தின் இயக்குனர் பிரித்தானியாவில்:புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?

Exit mobile version