TIFF 2009 2009 அவசரக் குறிப்புகள் :ரதன்
ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழா – 2009
காஸாவில் நடந்த தொடர் படு கொலைகளை உலகிலிருந்து மறைக்கு முகமாக தெல் அவிவ் நகரத்தைப்பற்றியும், இஸ்ரேலைப்பற்றியும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளும் களமாக இவ் வருட விழா உள்ளது என பேராசிரியர் John Greyson குற்றஞ்சாடடியுள்ளார்.
Jane Fonda, David Byrne, Danny Glover, Naomi Klein, Wallace Shawn, Ken Loach ஆகிய திரைப் பட படைப்பாளிகள் உடபட பல கலைஞர்கள் ,இவ் விழாவை பகிஷ்கரிக்கின்றார்கள். விழா மலர் ரெல் அவிவ் பற்றி பின்வருமாறு கூறியுள்ளது ““vibrant young city… of beaches, cafes and cultural ferment… that celebrates its diversity”. . பலஸ்தீனிய கிராமங்களை அளித்து உருவாக்கிய தெல் அவில்லைப்ற்றிய இக் கருத்து தவறானது என பேராசிரயர் மேலும் தெரிவித்தார்.
Jaffa என்ற பழம் பெரும் நகரமே இன்று ரெல் அவிவ்வாக மாறியுள்ளது. கி.மு 1470 களுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட நகரம் இது. பைபிளில் பல தடவைகள் குறிப்பிட்டதாக கிறிஸ்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதே போன்று அராபியர்களும் இது தங்களுக்குரியது என்று கூறுகின்றார்கள். நவீன காலங்களில் பாலஸ்தீனியர்கள் பெருமளவு வாழந்தனர். 1909லன ரெல் அவிவ், ஜபாவின் புற நகர்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1952ல் ஜபாவுடன் இணைக்கப்பட்டு ரெல் அவிவ் என்று அழைக்கப்படுகின்றது.
ரெல் அவிவ் தோன்றிய 100 வது ஆண்டு 2009. தொடர்ச்சியாக கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் இரத்தத்தின் வெற்றி விழா இவ் வருட ரொரண்ரோ விழா என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றார்கள்.
City of City என்ற பிரிவில் பின்வரும் இஸ்ரேலிய படங்கள் காட்டப்படுகின்றன.
Bena – Niv Klainer
Big Dig – Ephraim Kishon
Big Eyes – Uri Zohar
The Bubble – Eytan Fox
A History of Israeli Cinema Part 1 – Raphaël Nadjari
A History of Israeli Cinema Part 2 – Raphaël Nadjari
Jaffa – Keren Yedaya
Kirot – Danny Lerner
Life According to Agfa – Assi Dayan |
Phobidilia – Yoav Paz | Doron Paz
Eyes Wide Open Director Haim Tabakman
The Bubble Director Eytan Fox
Five Hours from Paris Director Leon Prudovsky
Phobidilia
Life According to Agfa
Lebanon
Google Baby
பேராசிரயர் தனது குறும் படத்தை பின்வரும் இணையத்தளத்தில் இணைத்துள்ளார்.
http://www.vimeo.com/6308870
சிற்றி ஒப் சிற்றி என்ற பிரிவு இம் முறை தான் முதன் முதலாக ரொரண்ரோ விழாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது ஏன்? என்ற கேள்விக்கு இது வரை விடை எதுவும் விழா அமைப்பாளர்கள் கூறவில்லை.
வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. நாளை திருகோணமலை, மட்டக்களப்பு, யாழப்பாணம், சாவகச்சேரி, கரவெட்டி சிங்கள நகரங்களாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டும்.