இங்கிலாந்து கிங்ஸ்டன் என்ற இடத்தைத் தலமையகமாகக் கொண்டியங்கும் திரு.வரதகுமாரின் முகாமையின் கீழ் இயங்கும் தன்னார்வ நிறுவனமான-NGO- தமிழர் தகவல் மையத்தின் ஏற்பாட்டின் பேரிலேயே இம்மாநாடு நடைபெறுய்கிறது.
இனங்களிடையே ஒற்றுமை ,எதிர்கால அரசியல் தீர்வு யோசனைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கறித்து கருத்துக்கள் இந்த சந்திப்பிலும் ஒன்று கூடலிலும் கலந்துரையாடப்படும் எனத் தெரியவருகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு ) ,மாவை சேனாதிராஜா (இலங்கை தமிழரசுக் கட்சி) , சுரேஷ் பிரேமச்சந்திரன் ( ஈ.பி.ஆர்.எல்.எப்.) , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ) , ஹென்றி மகேந்திரன் (டெலோ) ஆகியோரும்,ஏனைய தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “புளொட்” தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் கே.ஸ்ரீதரன் (சுகு) ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ,தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குவார்கள என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தற்போது சுவிற்சலாந்தில் தங்கியிருக்கும் அதமிழ் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி ரீதியாகவும் ,கூட்டாகவும் அந் நாட்டிலுள்ள புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அமைப்புகளுடன் பல் வேறு சந்திப்புகளிலும் ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்ள விருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரும் பணச் செலவில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இம்மாநாட்டின் பின்னணியில் அமரிக்காவிலிருந்து இயங்கும் நிதிக்கொடுப்பனவு அமைப்பும் செயற்படுவதாக அறிய வருகிறது. இலங்கை அரசிற்கு எதிராகவும் அமரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்களில் TIC ஒன்று .