யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
எங்கள் மீது தாக்குதல் நடத்தி எமது கல்வி நடவடிக்கையை பாதிக்கக் செய்யும் செயல்களை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாங்கள் எமது தமிழ் சமூகதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். எமது மக்களின் அரசியல், சமூகக் கலாச்சாரத்தில் மக்களை வழிநடத்தும் பாரிய பொறுப்பு எமது கல்விச் சமூகத்தின் முன் எழுந்து நிற்கிறது.
நாங்கள் உயிரோடு இருந்தால்தான் நாங்கள் கல்வியை கற்கமுடியும். கோழைத்தனமான மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் என்ன இலாபத்தைக் கண்டார்கள்.
மாணவ சமூகத்தோடு மோதுபவர்களை நாங்கள் விரைவில் இனம் காணுவோம். எங்களின் உயிர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் நாங்கள் இங்கு கல்வி கற்கின்றோம்.
இன்று தவபாலனுக்கு நடந்தது நாளை எமக்கு என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். எமது வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒரு தீர்வு எட்டப்படும் வரைக்கும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.