தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தடுத்து வன்முறையாளர்களை விரட்டியத்து 16 போரை கைதுசெய்தமையானது காவல்துறை மா அதிபருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைமா அதிபர், கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் எஸ்.என்.பீ.ஹேரத் மற்றும் கொம்பனித்தெரு காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
வன்முறையாளர்களைத் தடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுக்கெதிராக விசாரணைகளை நடத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
சிரச நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற நபர்களில் களனி பிரதேச அரசியல் வாதியொருவரின் இணைப்புச் செயலாளர்கள், தனிப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் களனி பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் காவல்துறை மா அதிபரை கடுமையாக சாடியிருந்ததாகவும் இதன்காரணமாகவே விசாரணைகளை நடத்த அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக காவல்துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சட்டவிரோதமாக கூடினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட வன்முறையாளர்கள் சிரச நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 12 மணித்தியாலங்களுக்குள் காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியினால் விடுதலை செய்யப்பட்டனர். உயர்மட்ட உத்தரவொன்றின் அடிப்படையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.