Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னி மவுஸ்:11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதை!

வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
 

சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார்.  இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது.

இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இவ் இரு எலிகளையும் சாட்சியாக வைத்து முள்கம்பி வேலிக்குள் அப்பாவித்தமிழ் மக்கள் படும் அவலத்தை பேசப்படாத உண்மைகளை வெளிக்காட்டும் படமாக அத்திரைப்படம் அமைந்துள்ளது. இவ் இரு எலிகளும் இவ்நிலைமையில் இருந்து தப்புகின்றனவா என்பதுதான் படத்தின் கிளைமக்ஸ் என தெரியவருகிறது. இப்படம் பெரியார் குறும்பட விழா 2009 ல் சிறப்பு பரிசினை பெற்றுக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை 2010 ஒஸலோவில் இடம்பெற்ற தமிழ் திரைப்படவிழா நிகழ்வில் சிறப்பு பரிசினையும் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இப்படம் இம்மாதம் பரிசில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சுதந்திர படவிழாவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதன் இயக்குனர் 26 அகவையுடைய சுபாஸ் என்பதுவும் இவர் வவுனிக்குளம் வன்னியை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுவும் தனது 13வது வயதில் ஐரோப்பாவிற்கு வந்தவர் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இவர் ‘நான் ஒரு கனவு காணலாமா?’ என நோர்வே தமிழ் சிறுபிள்ளை ஒன்றினை வைத்து மற்றும் ஒரு குறும்பட ஒன்றினை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   நந்து-நோர்வே.

Exit mobile version