Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னி மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே :கிழக்கு மாகாணத்திலும் தீர்மானம் முன்மொழியப்படுமா?

vanni_genocideவன்னியில் நடைபெற்ற பேரினவாத அரசின் மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றிய வேளையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை பலரது கவனத்தையும் ஈர்த்தமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.

வடக்க்குக் கிழக்கு சார்ந்த தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தில் கிழக்கு மக்களின் பங்கு அளப்பரியது. கிழக்கு மாகாணத்திலிருந்தே முதலாவது ஆயுதப்போராட்ட முனைப்புக்கள் இடம்பெற்றன.

தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களும் கூட ஆரம்பத்தில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போன்று கிழக்கு மாகாணதிலும் நிறைவேற்றப்படுவதே தீர்மானம் அதிக பெறுமானமுள்ளதாக் அமையும். இதற்கக முஸ்லீம் மக்கள் மத்தியிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது எதிர்கால நோக்கில் பயனுள்ளதாக அமையும்.

கிழக்கில் இத்தீர்மானத்தை முன் மொழிவதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க ஏதுவானதாக அமையும்.

Exit mobile version