Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னி மக்களை தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளது – த.சத்தியமூர்த்தி

வன்னி மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தற்போது தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களில் செங்கண்மாரி – வயிற்றோட்டம் – நிமோனியா ஆகிய தொற்று நோய்களால் மட்டும் மாத்தளன், அம்பலவன், பொக்கணை, வலைஞர் மடம், ஆகிய கடற்கரை பகுதியில் ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். என கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களினால் மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கடற்கரை பகுதியை நோக்கி செல்கின்றர். இப்பகுதியில் உயர் வெப்பத்தினால் கடும் தொற்று நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர்

அடைக்கலம் புகுந்த மக்கள் தறப்பாள்களில் கூரையமைத்து வாழ்வது மிகக்கடினமானது. அத்துடன் இந்த மக்கள் வெப்பம் மிகுந்த, நீர்த்தட்டுப்பாடான பகுதிகளிலேயே செறிந்து வாழ்கின்றனர்.

இடம்பெயர்வால் சுகாதார சேவைப் பணியாளர்களும் பணியில் ஒழுங்காக ஈடுபட முடியவில்லை எனவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Exit mobile version