Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் 60 ஆயிரம் சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது : யுனிசெப்.

15.03.2009.

வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவருகின்ற மோதல்களால் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக “யுனிசெப்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மோதல் காரணமாக பெருமளவு சிறுவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டுமுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இச்சிறுவர்களில் அதிகமானவர்கள் 12 தடவைகளுக்கும் மேலாக இடம்விட்டு இடம் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

பதுங்கு குழிகளிலும் மறைவிடங்களிலும் தொடர்ந்தும் வாழுவதற்கு இச்சிறார்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் நடைபெறும் பகுதிகளில் இச்சிறுவர்கள் கொல்லப்படுவதுடன் அவர்களின் குடும்பங்கள் , பெற்றோரும் கொல்லப்படும் சம்பவங்களையடுத்து அவர்கள் அவ்வாறான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் எனவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version