Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் யுத்த சூன்யப் பிரதேசம் : கிழக்கு லண்டன் கூட்டத்தில் தீர்மானம்

நேற்றய தினம் 17/08/08 ஞாயிறு  கிழக்கு லண்டனில்  புலம் பெயர்  அரசியல்  ஆர்வலர்களின் ஒன்று கூடல் நிகழ் வொன்றில் வன்னியில்  யுத்த களத்தில்  சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மற்றும்  இடம்பெயர்  அகதிகள்  தொடர்பாக கருத்துக்கள்  முன்வைக்கப் பட்டன.  வைத்தியக் கலாநிதியும்  சமாதானத்திற்கான  தமிழ் ஒன்றியத்தின் முக்கியஸ்தருமான  பாலா  தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  சிறீ லங்கா ஜனநாயக முன்னணியின்  முக்கியஸ்தர்களான  திரு.ரங்கன்  தேவராஜன்  மற்றும்  திரு.சிவலிங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வன்னியில்  யுத்த பிரதேசத்திற்கு  அருகாமையில் இராணுவத்தினரோ  புலிகளோ உள்நுளையவியலாத  யுத்த சூன்யப் பிரதேசம் ஒன்றினை ஏற்படுத்துவது  தொடர்பாக அரசதரப்பிற்கும்  புலிகளிற்கும்  அழுத்தம் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றினை முன்வைத்துப் பேசிய பலர், இதற்கான  முயற்சிகளில்  தீவிரமாக ஈடுபடவிருப்பதாக  முடிபு செய்துள்ளனர்.
புலிகளின் பிரதேசங்களிலிருந்து  தப்பிவரும் அப்பாவிப் பொதுமக்களின்  புகலிடமாக அமையக் கூடிய இவ்வாறான யுத்த சூன்யப் பிரதேசம் உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் எனவும்  புலிகள் மக்களை மனிதக் கேடையமாகப் ப்யன் படுத்த முனையும்  அபாயத்தை  மட்டுப்படுத்தும் எனவும் கருத்தப்பட்டது.
ரோஸ்கிய  வாதியும், புலம் பெயர் அரசியலில் காலத்திற்குக் காலம் தனது கருத்துக்களை வெளியிடுபவருமான  ஜேர்மன் அழகலிங்கம்  என்பவர்,  இலங்கை அரசாங்கத்திற்கெதிராக  செயற்படுவோர்  துரோகிகள் என வர்ணித்தார்.

Exit mobile version