Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் மீள்குடியேறிய மக்களின் அவலம்

வட கிழக்கில் மீள்குடியேற்றம் அம் மக்களின் நலன் குறித்தன்றி அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப நடாத்தப்பட்டு வருகின்றமை குறித்து பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு வந்தன.
தென்னிலங்கை இனவாதக் கட்சிகளும் கூட மீள்குடியேற்றம் குறித்து தமது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தன. அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி, மீள்குடியேற்றம் தொர்பான சர;வதேச நிபந்தனைகளையும் மீறி மீள்குடியேற்றத்தினை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் மழை பெய்யத் தொடங்கியதையடுத்து மீள்குடியேறிய மக்களின் நிலை மேசமடைந்துள்ளது. மழையினால் கூடாரங்களுக்குள் மழை புகுந்து இருக்கவோ, படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேறிய மக்கள் தற்காலிக கூடாரங்களிலும் அழிவடைந்த கட்டடிங்களிலும் பூரத்தி செய்யப்படாத கட்டடிங்களிலுமே தங்கவைக்கப்பட்டள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பாக தங்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் மீள் குடியேறியோர் பலரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆயினும் மீள்குடியேற்றம் மந்த கதியில்லேயே தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
மழையினால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இப்போதுதான ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இவ்விடயம் குறித்து ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு ஒரு மாற்றுத்திட்டத்தினை வகுக்குமாறு அவர்களிடம் கோரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

Exit mobile version