Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் சிங்களக் குடியேற்றங்கள் : மங்கள சமரவீர

வன்னி மக்களுக்குச் சொந்தமான 85 வீத நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித்திட்டத்தில் இறங்கியிருக்கின்ற அரசாங்கம், அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி வருகின்றது. இந்நிலையில், 180 நாள் வேலைத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

அது எங்கே போய் முடியப்போகின்றது என்பதில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார்.

நலன்புரி முகாம்களில் 20 ஆயிரம் சந்தேக நபர்கள் இருப்பதாக கூறுகின்ற அரசு இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பேரை பழிவாங்குவது நியாயமற்றது. சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களின் நரக வேதனை குறித்து மனசாட்சியுள்ள ஒவ்வொரு சிங்களவரும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மங்கள எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version