522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்த புத்தர் சிலையை நிர்மாணிக்க ஆயிரம் மில்லியன் செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்ற இராணுவ வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளது என கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் அமைப்பாளரான பிலப்பிட்டிய பஞ்சதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்
அமைதியின் உருவமான புத்தர் சிலையை சிங்கள பௌத்தம் மேலாதிக்கம் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளின் சின்னமாக வன்னியில் நிறுவ முற்படுவது தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பின் சின்னமாகவும் அமையும் என சமூக அக்கறையுள்ளோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.