|
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள வன்னி பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கியிருப்பதால், அங்கு கடும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக ஐநா உணவு நிவாரண முகமை தெரிவித்துள்ளது.
|
|
| . | |
|
இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் சண்டையால் ஏராளமான தமிழர்கள், விடுதலைப்புலிகளுடன் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கை ராணுவம் அப்பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ள தால், அங்கு தங்கியிருக்கும் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் பெய்த பெருமழை காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஏற்கனவே உணவுப்பஞ்சம் நிலவியதாகவும், தற்போது ஒரே இடத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் தங்கியிருப்பதால், பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்றும் ஐநா உணவு நிவாரண முகமை என்னும் அமைப்பு கூறியுள்ளது. |