Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியர்கள் வாக்குகளை வளைகுமா அதிமுக?

20 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
2001 தேர்தலில், அதிமுக பாமகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. அதில் 20 தொகுதிகளை பாமக வென்றது. அதன் பின்னர் 2006 மற்றும் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தது. 2006இல் 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது பாமக. 2011ல் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டாலும், வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் பாமக வெற்றி பெற்றது. அதனை அடுத்து, 2016ல் தனித்து நின்று பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. பாமக தலைவர் ராமதாஸின் மகன் மற்றும் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இப்போது வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற நிபந்தனை அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த ஒதுக்கீடு வன்னியர்களுக்கு பெரும் பாதகத்தை உருவாக்கும். ஏற்கனவே 20% இட ஒதுக்கீட்டில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை வன்னியர்கள் பெற்று வரும் நிலையில், இப்போது 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் பிரதிநிதித்துவத்தை விட குறைவானது. ஆனால், தேர்தலுக்காக ஒரு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் வாக்குகளைப் பெற்று எடப்பாடி பழனிசாமி வெல்ல நினைக்கிறார். ஆனால் இது வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறிதான்.

Exit mobile version