Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னிப் படுகொலைகளின் பின்னர் இன்னும் சர்வதேசத்தைக் கைவிடாத சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தன் மீண்டும் ‘சர்வதேசம். என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். அதிகமாக தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்து. எந்தவொரு தமிழ் உறுப்பினரையும் அரசதரப்பில் தெரிவுசெய்யவில்லையென்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
அது எமது கடமை. அதை நிறைவேற்றுவோமாகவிருந்தால் அது ஒரு பெருவெற்றி. எமது வாக்குகள் வெற்றிலைக்கு விழுமானால் அது எமக்கு பாதகமாகவே அமையும். முன்னாள் முதலமைச்சர் வெற்றிபெறுவது சந்தேகம் என பலரும் தெரிவிக்கின்றனர். அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணான வாக்குகள் என்று கருதி அவற்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு அளிக்கசெய்ய வேண்டியது உங்களது கடமை.
எமது நியாய பூர்வமான அபிலாஸைகள் மற்றும் எங்களது ஆட்சியை கொண்டுவருவதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்.
வடமாகாணத்திலே எந்தவிதத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு நிச்சயமாக எங்கள் கட்சி வெற்றிபெறும். அப்போது இந்த இரு மாகாணசபைகளும் இணைந்து பல விடயங்களை கையாளும் நிலைமை உருவாகும். பல விடயங்கள் தொடர்பில் பல முடிவுகளை எடுக்கலாம். தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஆட்சி அதிகாரங்களை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

கிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும்

Exit mobile version