Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னிப் படுகொலைகளின் போது களத்தில் நின்ற இந்திய இராணுவத் தளபதி?

ஒருவருடங்களின்  முன்னர் வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போது  இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல பாதுகாப்புத் துறை இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியதற்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

 வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஆதாரமாக, இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்ததாக, நிக்கல் கோக்கலே எழுதியுள்ள பத்திரிகை கட்டுரை ஒன்றில் வெளியாகியுள்ளது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில், வன்னிப்பகுதிக்கு நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில், அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும், “அவுட் லுக்” பத்திரிகையின் முன்னாள் நிருபருமான நிக்கல் கோக்கலே தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:

 போர் இவ்வாறான ஒரு முடிவை எட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், போர் முடிவடைந்துவிட்டது;பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது.

இறுதியில் இலங்கைக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை பேட்டி கண்டேன்.பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் தேதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரிடம் பல கேள்விகளை கேட்டேன்.பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே?எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார்.எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” – என்று பதிலளித்தார்.அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” – என்றேன்.

அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த இலங்கை இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார, ”இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

இவ்வாறு அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version