Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னிப்படுகொலைகளை நாமும் இணைந்தே நடத்தினோம் : இந்திய அரசு

India-Sri-Lankaஇலங்கை அரசு வன்னியில் இனப்படுகொலை நிகழ்த்திய போது இந்திய அரசு அதன் பின்புலத்தில் செயற்பட்டது. இராணுவ மற்றும் திட்டமிடல் உதவிகளை வழங்கியிருந்தது. அதனை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி உறுதிப்படுத்தியுள்ளார். 2008ம் ஆண்டு உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற போது இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு சில வாரங்களில் பூணகரி பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும் இதன் பின்னர் புலிகளின் கடல் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்

1983 இல் புலிகள் உடபட மேலும் மூன்று போராட்ட இயக்கங்களுக்கு இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சியை வழங்கிய இந்திய அரசு மறுபுறத்தில் ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு எவ்வாறு ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டதாக தோழர் மருதையன் தனட்.கு நேர்காணலில் கூறியுள்ளார்.

வன்னிப் படுகொலைகளின் போர்க்குற்றங்களை ராஜபக்ச அரசோடு இணைந்து இந்திய அரசும் நிகழ்த்தியுள்ளது என்பது இந்திய அரசால் இப்போது வெளிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version