Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட கொரிய மக்கள் நடன விழா துவங்கியது.

உலகின் மிகப் பெரும் நாட்டிய திருவிழா என்று கருதப்படும் அரிரங் திரு விழா வடகொரியாவின் பியாங்யாங் நகரில் தொடங் கியது. ஏராளமான சிறுவர் கள் உள்ளிட்டு ஒரு லட்சம் வடகொரிய மக்கள் இவ் விழாவில் பங்கேற்கின்றனர் என்று வடகொரியா மத்திய செய்தி நிறுவன அதிகாரி கூறினார். பியாங்யாங் மேதின ஸ்டேடியத்தில் இவ்விழா வின் தொடக்கவிழா நடை பெற்றது. வடகொரியா மக்கள் உயர்நிலை சட்ட மன்றத்தின் தலைமைக் குழு வின் துணைத் தலைவர் யாங் ஹயோங் சோப் உட் பட மூத்த தலைவர்கள் தொடக்கவிழாவில் பங்கேற் றனர். இவ்விழா அக்டோபர் 10 வரை நீடிக்கும்.வடகொரியாவின் அணு திட்டங்களை நசுக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் அதன் மீது பொரு ளாதாரத் தடையை விதித் துள்ளன. அத்தடையை தீர முடன் மக்கள் எதிர்கொள் வதற்கு மக்களின் ஒற்றுமை அவசியம் என வலியுறுத் தும் விழாவாக இது அமை கிறது. இவ்விழாவில் ஆயிரக் கணக்கான ஜிம்னாஸ்டுகள் ஒருங்கிணைந்த உடற்பயிற் சிகளில் ஈடுபடுவார்கள். பல் லாயிரக்கணக்கான சிறுவர் கள் வண்ணத்தாள்களுடன் அரங்கில் வண்ணக் கோலங் களைப் படைப்பார்கள்.இத்திருவிழா 2002ம் ஆண்டில் மறைந்த தலைவர் கிம் இல் சுங்கின் 90வது பிறந்த நாள் நிறைவு விழா வில் முதல் முதலாக நடத்தப் பட்டது. இயற்கையின் சீற் றத்தால் வடகொரியா பாதிக் கப்பட்ட 2003, 2004 மற்றும் 2006ல் இவ்விழா நடைபெற வில்லை. 2009ம் ஆண்டில் நடைபெற்ற விழாவுக்கு கொரிய கிராமப்புற பாட லின் பெயர் அளிக்கப்பட் டது. அப்போது உள்நாட்ட வர் மற்றும் வெளிநாட்ட வர்களாக 14 லட்சம் மக்கள் விழாவைக் கண்டு களித்த னர் என்று வடகொரியா ஊடகங்கள் கூறின.”இது மிக அபாரமா னது. உண்மையிலேயே மிக அபாரமானது. அற்புதமான அரங்கம். மக்களின் கலை யும், பிரமாதம்” என்று ஜெர் மன் சுற்றுலாப் பயணி ஆண்டிரியாஸ் ஹெக்ஸ் சர்வதேச செய்தி நிறுவன மான ஏடிபிஎன் இடம் கூறி யுள்ளார்.பியாங்யாங் மேதின ஸ்டேடியத்தில் மகிழ்ச்சி மிக்க குரல்கள் ஒலித்தன. கிம் இல் சுங் புகழ்பாடும் பாடல்களும் ஒலித்தன என்று வடகொரிய மத்திய தொலைக்காட்சி ஒளிபரப் பியதை தென்கொரியாவின் யான்ஹோப் செய்தி நிறு வனம் தொடர்ந்து கவ னித்து வருகிறது.

Exit mobile version