வட கிழக்கில் 2000 மேற்பட்ட யுத்த அனாதைச் சிறுவர்கள்.
வட – கிழக்கில தமது பெற்றோர்கள் இருவரையும் அல்லது ஒருவரை யுத்தத்தில் இழந்த சிறுவர்கள் 2000 இற்கு அதிகமானவர்கள் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்திருக்கிறார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 404 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 696 சிறுவர்களும் கிழக்கு மாகாணத்தில் 1000 மேற்பட்ட சிறுவர்கள் உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளதுடன், விரைவில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இச் சிறுவர்களுக்கு “பாதுகாவலர் திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதகவும் தெரிவித்திதுள்ளார்.