Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட கிழக்கில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் : பேரினவாதியின் நச்சுக் குரல்

வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ,சிங்களவர்களுக்கு எதிரான சகல சக்திகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த அடிப்படை வாதியும் மகிந்த ராஜபக்சவின் நண்பருமான சம்பிக மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சோம தேரரின் 8வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு இனவாத நஞ்ச்சூட்டும் சமூக விரோதிகளான இவர் போன்றவர்கள் பேரினவாத அரசுகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.

Exit mobile version