ஏற்கனவே வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் மாதகல் பகுதியிலும் சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவித்து விகாரை ஒன்று பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நயினாதீவு நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு ஏதுவாக நில அளவைப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிலஅளவைத் திணைக்களத்திற்கு அரச உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களின் சுய அடையாளத்தை சீர்குலைக்குலைப்பதனூடாக ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சுலோகத்தை அழிக்க முயலும் சிங்கள பௌத்த பாசிச அரசானது, பரவலான குடியேற்றத் திட்டங்களையும் அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் மேற்கொண்டு வருகின்றது. புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ் வியாபாரிகள் சிலர் வட கிழக்கு சிங்கள மயமாதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இங்கு குறித்துக்காட்டத்தக்கது.