இலங்கைச் அரச சட்டங்களின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என அமைச்சர் ஹெகலிய ரம்புவெக்கல தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வட மாகாணத்திற்கு இந்த இரண்டு உரிமைகளும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். இலங்கையில் சட்டமாக உள்ள 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு இந்த இரண்டு அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். 1989 ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாள் தலைமையில் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் இந்த இரண்டு அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. 113 வது திருத்தச்சட்டம் என்பது சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு எதிராக இந்திய அரசின் நலன்களுக்கு அமைவாக ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.