வடகிழக்கு மாகாணசபை இணந்த பிரதேசங்களாக 2006ம் ஆண்டுவரை காணப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஜே.வி.பி தொடுத்த வழக்கினைத் தொடர்ந்து இது இரண்டாகப் பிளக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் கிழக்கில் தேர்தல் நடத்திய பின்பே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்ட பின்னர் இது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கானது. இதன் அடிப்படையில் வடக்கில் இலங்கைப் பாசிச அரசு அதிகாரத்தைக் கையகப்படுத்தினால் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் தடையின்றி நடைபெறும். கிழக்கில் அதிகாரம் அவர்களின் கைகளிலேயே உள்ளது.
1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி, வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடைசியாக 1988-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
அப்போது இந்திய அரசின் அனுசரணையோடு முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் இந்தியாவிற்கு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தப்பிச் செல்லும் முன்பதாக தமிழீழப் பிரகடனம் மேற்கொண்டார். அதனால் அப்போது ஆட்சியிலிருந்து அதிபர் பிரேமதாசவால் மாகாண சபை கலைக்கப்பட்டது. இந்த அரசியல் நாடகத்தின் பின்னர் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போது வடக்கில் நடைபெறும் தேர்தல் கிழக்கைப் பிளந்து நடைபெறுகிறது.
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை அழிப்பதற்காக இலங்கையில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம், பாசிச அரச அதிகாரதின் கீழ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும், அது நடத்தும் இனச்சுத்திகரிப்பிற்கும் ஆதரவாக முன்னை நாள் புலிகள் தலைமை மட்ட உறுப்பினர்கள் பலர் இலங்கை அரசால் களத்தில் இறக்கப்படுள்ளனர்.