சர்வதேச குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் வடக்குப் பிரதேசங்களில் இராணுவத்தை பயன்படுத்துகின்றது. இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிப்பதோடு வடக்கு தேர்தல்களில் ஜனநாயகம் அற்றுப் போய் பொது மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஆளும் தரப்பு அரசியலை வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்புகள் முன்னெடுக்கின்றமை நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலான விடயமாகும். எனவே பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தொடர்ந்தும் கூறுகையில், புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் இல்லை. தேர்தல்கள் என்ற பெயரில் மோசடிகளே இடம்பெறுகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் செயற்பட முடியவில்லை. ஆளும் தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களை இராணுவ தரப்புக்களை பயன்படுத்தியே மேற்கொள்கின்றது. வீடு வீடாகச் சென்று வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றது.
அதே போன்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யின் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் தனது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்கியது. பொலிஸில் முறையிட்டால் விசாரணைகள் இல்லை, பின்னர் அதே பொலிசார் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நேரடியாகவே பொதுமக்களை அச்சுறுத்தி ஆளும் தரப்பை ஆதரிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய அழுத்தங்களால் உள்ளுராட்சித் தேர்தலில் மிகவும் மோசமாக இடம்பெறுகின்றன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கின் தேர்தலை நியாயமானதாக கருத முடியாது. மக்களின் உண்மையான விருப்பங்கள் இடம்பெறவில்லை. ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் அரசாங்கம் சுய நலத்திற்காக வடக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மேன்மேலும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றார.
சர்வதேச குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் வடக்குப் பிரதேசங்களில் இராணுவத்தை பயன்படுத்துகின்றது. இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிப்பதோடு வடக்கு தேர்தல்களில் ஜனநாயகம் அற்றுப் போய் பொது மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஆளும் தரப்பு அரசியலை வடக்கு கிழக்கில் பாதுகாப்பு தரப்புகள் முன்னெடுக்கின்றமை நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலான விடயமாகும். எனவே பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தொடர்ந்தும் கூறுகையில், புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் இல்லை. தேர்தல்கள் என்ற பெயரில் மோசடிகளே இடம்பெறுகின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் செயற்பட முடியவில்லை. ஆளும் தரப்பு தமது தேர்தல் பிரசாரங்களை இராணுவ தரப்புக்களை பயன்படுத்தியே மேற்கொள்கின்றது. வீடு வீடாகச் சென்று வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றது.
அதே போன்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யின் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் தனது குண்டர்களைப் பயன்படுத்தி தாக்கியது. பொலிஸில் முறையிட்டால் விசாரணைகள் இல்லை, பின்னர் அதே பொலிசார் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நேரடியாகவே பொதுமக்களை அச்சுறுத்தி ஆளும் தரப்பை ஆதரிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய அழுத்தங்களால் உள்ளுராட்சித் தேர்தலில் மிகவும் மோசமாக இடம்பெறுகின்றன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கின் தேர்தலை நியாயமானதாக கருத முடியாது. மக்களின் உண்மையான விருப்பங்கள் இடம்பெறவில்லை. ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் அரசாங்கம் சுய நலத்திற்காக வடக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மேன்மேலும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என்ற