Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம்.

 

வடக்கு – கிழக்கை இணைக்கும் மணலாற்றில் சிங்கள பெரும்பான்மையின குடியேற்றங்களை வலுப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றுக்கு சென்ற சிறீலங்கா அதிபரது மூத்த ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்ஷ, அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு – கிழக்கைப் பிரிக்கும் நோக்குடன் மணலாற்றில் ஏற்கனவே குறிப்பிட்டளவு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்த போதிலும், போர் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த சிங்கள மக்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதுடன், மேலும் பல புதிய குடியேற்றங்கள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாளுக்கு முன்னர் மணலாற்றில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்பட இருப்பதாகவும், இதற்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 Thanks:TBC

Exit mobile version