Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு – கிழக்கு இணையக்கூடாது – பிள்ளையான் கூச்சல்

karuna_pillayanவடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னை நாள் உறுப்பினரும் இன்றைய பாசிச அரசின் அடியாளுமான பிள்ளையான், கிழக்கு வாழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் கீழ் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும், வடக்குடன் இணைப்பதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்துள்ளார். கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவது என்பதற்கான அடிப்படை அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு ஆதிக்கம் தொடர்பான கிழக்கு மக்கள் மத்தியில் தோன்றியுள்ள தவறான எண்ணங்கள் நீக்கப்படுவதற்கான முழுமையான அரசியல் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒரு அரசியல் வேலைத்திட்டம் இல்லையெனின் பிள்ளையான் போன்ற கூலிகள் கூச்சலிடுவதை நிறுத்த முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அரசியல் திட்டத்திற்கு தயாரில்லை என்பதைத் தவிர, அதற்கான அரசியல் தகமையும் வாக்குப் பொறுக்க முனையும் கூட்டமைப்பிடம் இல்லை.
ஆக, சுய நிர்ணைய உரிமைக்காகப் போராட எண்ணும் அரசியல் அமைப்புக்கள் கிழக்கு மக்களின் யாழ்ப்பாண மேலாதிக்கம் தொடர்பாக நிலவும் கருத்துக்களை களைந்து நம்பிக்கை வழங்கங்க வேண்டும்

Exit mobile version