பாதுகாப்புப் படைத் தலைமையகம், படைப் பிரிவு, படையணி, ரெஜிமென்ட், உதவிப் படைப் பிரிவு உள்ளிட்ட இராணுவப் பிரிவுகள் நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்த காலத்தில் தற்காலிகமாக
ஏற்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியும், இராணுவத்தின் நிரந்தரப் பிரிவாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பன பாதுகாப்புப் படைத் தலைமையகமாவும், வெலிஓயா, ஹம்பாந்தோட்டை, யால ஆகிய போன்றவை பிரதேச தலைமையகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஏனைய செயற்பாட்டு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர யுத்தத்தின்போது ஆரம்பிக்கப்பட்ட ஐந்து படைப் பிரிவுகள், 28 படையணிகள், ரெஜிமென்ட் மற்றும் 49 படையணிகள், 12 உதவிப் படைப் பிரிவுகள் என்பன நிரந்தரமான இராணுவப் பிரிவுகளாக மாற்றப்படும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.