இலங்கையின் இடது சாயம் பூசிக்கொண்ட பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி இலங்கையின் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை எனத்தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அனுரகுமார திசநாயக்க வடக்கில் தேர்தல் நடத்தினால் அது பிரிவினைக்கே வழிவகுக்கும் என்றார். தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பத்து அவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதே பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று அனுரகுமார போன்ற இனவாதிகளுக்குத் தெரியாததல்ல. பாலஸ்தீனிய மக்கள் பிரிந்துபோதலை நிபந்தனை இன்றி அங்கீகரிக்கும் இவர்கள் தமது சொந்த நாட்டில் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாகும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையையே அங்கீகரிக்க மறுக்கின்றனர்.