Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் மேலும் இரண்டு இராணுவத்தளங்கள் : தொடரும் இராணுவமயம்

இலங்கை கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது.இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மாதகல் சம்பில்துறையில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் இலங்கை கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

Exit mobile version