Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் முதலமைச்சர் ஏகமனதாகத் தெரிவு : புதிய காட்சிகள் ஆரம்பமாகிறது

cmjaffnaஇலங்கையின் வடக்கில் மக்கள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான தமது உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வாக்குகளாகத் தெரிவிதுள்ளனர். தென்னிலங்ககை இனவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி யும் அதிலிருந்து வெளியேறிய குழுக்கள், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமஜக் கட்சி போன்ற அனைத்து பாசிச ஆதரவாளர்களுக்கும் மக்கள் தமது தேவைகள் என்ன என்று கூறியுள்ளார்கள். தவிர, இலங்கை அரச ஆதரவு சாதிச் சங்கங்கள், துணைக் குழுக்கள் ஆகியவற்றின் முகங்களில் மக்கள் ஓங்கி அறைந்துள்ளனர்.

தேர்தல் முடிவின் பின்னர் விக்னேஸ்வரன் எதிர்பார்தபடியே முதலமைச்சராக ஏகமனதாகத் தெரிவானார்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திரு. சீ.வி..விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேர்தல் வெற்றி வெற்றி என்பது மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கான வடிகாலாகப் பயன்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பிற்கும் அது பதவிகளை வழங்கியிருக்கிறது.

எதிர்பாராத திகில் திருப்பங்கள் மிக்க அரசியல் காட்சிகளை இனிமேல் காணலாம்

Exit mobile version