கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் திட்டமிட்ட மோதலைத் தோற்றுவித்த பேரினவாத அரசுகள் அதனூடாக தமிழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியது, இதனால் உருவான முரண்பாட்டின் இடைவெளியில் சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்தி தமிழ்ப் பேசும் மக்களைச் சிறுபான்மையாக்கியுள்ளது. வடக்கில் சாதீய மற்றும் பிரதேச முரண்பாடுகளைத் திட்டமிட்டுத் தோற்றுவிக்கும் இலங்கை அரசு தமிழ் மக்களைச் சிறுபான்மையாக்கி வருகின்றது.
இதனால் சாதிச் சங்கங்களையும், சாதிக் கட்சிகளையும், அதற்கு இராணுவ துணைக்குழு அடியாட்படையயையும் உருவாக்கியுள்ளது. சுய நிர்ணய உரிமை என்பது யாழ்ப்பாண வேளாளர்களின் ஆதிக்க வெறி எனவும் இனவாதம் எனவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் கூட்டம் ஒன்றையும் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில் வடக்கில் தேர்தலை நடத்த உகந்த சூழல் நிலவுவதாக ராஜபக்ச கூறுவது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
NN