Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் : சிறிதரன்

வடமாகாணத்தில் சில பகுதிகளில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள் நிரூபிக்க முயற்சிக்கின்றன, உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். தேசிய மரபுரிமைகள் அமைச்சு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சான்றுகளை சிங்கள பௌத்தர்களுக்கு உரிமையானது என வெளிக்காட்ட சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சான்றுகள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமையை உறுதிப்படுத்துகின்றன. வடக்கின் இந்து வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் வடக்கில் காணப்படும் ஓர் இந்து ஆலயத்தில் சிவன் சிலை அகற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கலாச்சார ஆக்கிரமிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version