Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாது: இராணுவத் திட்டத்திற்கான முன்னுரை

ruvanவடக்கிற்கு பயணம் செய்யும் சில வெளிநாட்டவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற்றே இனிமே அங்கு செல்ல முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். எனவே முன்கூட்டிய அனுமதியுடன் வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் வடக்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னரே வடக்கிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு இலங்கையின் இராணுவக் காலனியாக மாறிவருகிறது.

இராணுவக் குடியிருப்புக்கள், இராணுவப் பொருளாதாரம் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட வடக்கு சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதற்கான ஆரம்பத் திட்டங்கள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பதன் அறிகுறியே இத்தடை. தவிர, வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் தொகை கடந்த சில மாதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாட்சியின்றி வன்னிப்படுகொலைகளை நடத்திய இலங்கை அரசும் அதன் எஜமானர்களான அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளும் வடக்கில் எதிர்கால அமெரிக்க இராணுவத் தளத்தை அமைப்பதற்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளனவா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.

போர்க்குற்ற விசாரணை என்று மக்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு தெற்காசியாவின் அமெரிக்க இராணு மையம் உருவாக்கப்படுவதற்னா அறிகுறிகள் தெரியாமல் இல்லை.

வன்னியில் அமைந்திருக்கும் அமெரிக்க இராணுவ முகாமிற்கு ராஜபக்சவின் கொள்ளைக்கார நண்பரான தம்மிக பெரேராவின் ஐந்து நட்சத்திர விடுதியான கிங்ஸ்பரி ஹோட்டேலிலிருந்தே உணவு அனுப்பிவைக்கப்படுகின்றது. அனைத்துப் போக்குவரத்துக்களும் விமானப் பயணங்களாகவே நடைபெறுகிறது. ஆக, வடக்கின் அவலங்களுக்குள் மறைக்கப்படுவது அமெரிக்க இராணுவ நிலைகளே தவிர போர்க்குற்றங்கள் அல்ல.

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்
உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்
Exit mobile version