இலங்கையில் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குக் கூட குறைந்தபட்சத் தீர்வை முன்வைக்கத் தயரற்ற புதிய ஆட்சியின் புதிய முகம் தமிழ்ப்பேசும் மக்களுக்கானதல்ல; சிங்கள உழைக்கும் மக்களுக்கானதும் அல்ல. ரஜபக்ச குடும்பம் பெரும் தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பல்தேசியச் சுரண்டலை அனுமதித்தது. மைத்திரி அதனை இலவசமகவே அனுமதிப்பார். ஆக, மக்களுக்கான ஊழலற்ற அரசு மைத்திரியின் அரசல்ல.
காலனியத்திற்குப் பிந்திய காலம் முழுவதும் இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடுதான். ஆக, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் சுய நிர்ணைய உரிமையைக் கோருகின்றன. இந்த நிலையில் தேசிய இனங்களின் பிரச்சனை குறித்து மூச்சுக்கூட விடாமல் ஆட்சி அமைப்பதே மிகப்பெரும் ஊழல்.
வன்னியில் இலட்சங்களாக மக்கள் படுகொலை செய்யபட்ட போது அங்கு மனிதாபிமானப் பணி நடக்கிறது என்று உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு ராஜபக்ச அரசு கொலைகளை நடத்தி முடித்தது. அப்பிரச்சரத்தின் அச்சணியாகச் செயற்பட்டவர்களில் ஒருவர் வடக்கின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் எச்.எம்.ஜி.எஸ்.பாலிகார. வன்னியில் மகிந்த கும்பல் அனுப்பிய கொடிய இராணுவத்தின் பிடியில் மூன்று லட்சம் மக்கள் சிக்கியிருந்த போது அங்கு ஐம்பதாயிரம் மக்களே உள்ளதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டவர். இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் மறைப்பதற்கு வழிவகுத்தவர். ஆக, இனக்கொலைக்குத் துணை சென்றவர்.(பார்க்க: காணொளி).
இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிடப் பிரதிநிதியாகப் பதவிவகித்த போது ஆளுனர் மேற்கொண்ட பிரச்சாரமே மேலுள்ளது.