Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கின் இராணுவ ஆட்சியாளரும் கூட்டமைப்பும்

வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை நிறுத்தப்படும் என இராணுவத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்ததாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினருக்கு இவ்வாறான எந்தவொரு உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
வடக்கில் கடமையாற்றி வரும் இராணுவத்தினர் தமிழ் மக்களை பதியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், இதனால் இவ்வாறான ஓர் உறுதி மொழி அளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இதே வேளை வடக்கில் முழுமையான இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பதையும் இலங்கை அரச உளவுப் படையின் முழுமையான கட்டுப்பாட்டினுள்ளேயே இவை உட்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் பல அமைப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. வடக்கின் இராணுவ ஆட்சியாளர்கள் அங்கு மக்களைப் சட்டவிரோதமாகப் பதிவு செய்து வருவதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

Exit mobile version