Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடகிழக்கு மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் : உதுல் பிரேமரத்ன

வடகிழக்கு மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.  விடுவிக்க தென்னிலங்கை மக்கள் முன்வரவேண்டும் என உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மக் கள் படுமோசமான முறையில் இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்றனர். அது மட்டுமன்றி கடத்தப்படுதல் காணாமல் போதல் மற்றும் கொலை செய்தல் என மனித உரிமைகளை மதிக்காத சர்வாதிகார சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றிய மைக்க வேண்டும்.
யாழில் காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோரை இதுவரை காவற்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. விசாரணைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது. அரசின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிப்பவர்கள் காணாமல் போகின்றனர். இதனை அனுமதிக்க டியாது. மாற்று போராட்டம் ஒன்றுக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தப் போவதாக உதுல் பெரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version