Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட,கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை : இலங்கை அமைச்சர்

சமஷ்டி கொழும்புக்கு எதிர்மறையான கோட்பாடு! வட,கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை !! – இலங்கை அமைச்சர் இந்தியாவில் தெரிவிப்பு.

இலங்கை மக்களின் நலன்களை மனதில் கொண்டு சகலரும் புனிதமான தீர்வுகளைப் பற்றிச் சிநித்திக்குமாறு வேண்டுகிறேன் என ஆளும் கட்சி எம்.பி.யான ரஜீவ விஜயசிங்க புதுடில்லியில் வைத்து தெரிவித்திருக்கிறார். இதனை ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவத்திருக்கிறது. ரஜீவ விஜயசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் லிபரல் கட்சி உறுப்பினராவார். ரஜீவ விஜயசிங்க, கடந்த காலத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் நலன் விரும்பிகள் பரிசுத்தமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும், புராதானமானதும் பொருத்தமற்ற அடியத்திவாரத்தை கொண்டிராததுமானவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை எனவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் சச்ரவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கிழக்கிலுள்ளவர்கள் தாங்கள் தனித்துவமான அடையாளம் கொண்டவர்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள், 2004 ல் புலிகளுக்கிடையிலான பிளவு எற்பட்டிருக்கிறது போன்றவற்றால் வடக்கு, கிழக்கை ஒரே அலகாகக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார். தமிழத் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் சம்ஷ்டியைப் பற்றிப் பேசுவதாகவும், கொழும்பைப் பொறுத்தவரை அது எதிர்மறையான கோட்பாடாகும் எனவும், இந்தக் குழுவின் (த.தே.கூ.) நம்பிக்கையை அரசாங்கம் வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோருபவாகள் அவர்களின் ஆரம்பக்கட்ட அணுகுமுறையிலுள்ள தீர்க்கமான அழிவுத்தன்மையை மனதில் கௌ;ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version