Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடகிழக்குப் பல்கலைக் கழகங்களுகுச் சிங்கள மாணவர்கள் : ஆர்ப்பாட்டம்.

இன ஒற்றுமை தொடர்பான திட்டவடிப்படையில் வட கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான 300 சிங்கள மாணவர்களை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கு அனுப்புவதற்கு எதிராக அந்த மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட்05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு வோட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு எதிரில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் செல்வதற்கு 9 ஆயிரத்து 500 ரூபா விமான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அத்துடன் தங்குமிட வசதிகளை தாமே ஏற்படுத்தி கொள்ள வேணடும் எனவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இது நியாயமற்ற தீர்மானம் எனவும் தமக்கு தென் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version