வடகிழக்கிலிந்து செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்ற மகிந்த அரசு உத்தரவு
இனியொரு...
இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த வகையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை வடகிழக்கிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல பணிகளையும் இடைநிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காலக்கெடு எதனையும் அரசாங்கம் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அதே வேளை இந்திய துணைத் தூதரகமும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வடகிழக்கில் நிலைகொள்கின்றன.