Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வங்க தேசத்தில் தேர்தல் வன்முறை : 12 இற்கு மேற்பட்டோர் பலி

எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் வாக்குப்பதிவு இன்று கடும் வன்முறைகளுக்கிடையே நடந்து வருகிறது.
ஆளும் கட்சி ஆட்சியிலிருந்தவாறே தேர்தலை நடத்தும் நடைமுறையைக் கண்ட்டித்துத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆசியாவில் கலாச்சாரச் செழுமையும், உயரிய வழங்களையும் கொண்ட நாடான பங்களாதேஷ் தன்னார்வ நிறுவனங்களால் வழி நடத்தப்படுகிறது. அரசிற்கு எதிரான மக்கள் உணர்வுகளை தமது தலைமையில் எடுத்துக்கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் -என்.ஜீ.ஓ- இன்று அந்த நாட்டை உலகின் அதிக வறுய நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.
நடைபெற்ற மொகமெட் யூனஸ் இன் தலைமையிலான தன்னார்வ கிரமீன் வங்கியின் பங்கு குறிதளவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கசார்பற்ற காபந்து அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும் வழக்கத்தை , தற்போது ஆளும் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.
மொத்தமுள்ள 390 தொகுதிகளில் 147 தொகுதிகளில் மட்டும் குறைந்த அளவு மக்களே வாக்களித்தனர். 200 தொகுதிகளின் பூத்துகளில் வன்முறை தாண்டவம் ஆடியது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 147 தொகுதிகளில் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், பிரதமரின் அவாமி லீக் கட்சி 95 சீட்டுகளையும், கூட்டணி கட்சியான ஜாதியா கட்சி 12 சீட்டுகளையும் இதர கட்சிகள் 13 சீட்டுகளையும் கைப்பற்றியுள்ளன. பிரதமர் ஷேக் ஹசீனா போட்டியிட்ட கோபல்கஞ் மற்றும் ராங்க்பூர் தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார்.

தேர்தல் புறக்கணிப்பு காரணமாக மற்ற தொகுதியின் வேட்பாளர்கள் தேர்வுச் செய்யப்படவுள்ளனர். நாடு முழுவதும் குண்டுகள் வீசியும், வாக்குச்சாவடிகளை கொளுத்தியும் நடைபெற்ற வன்முறையில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Exit mobile version