Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வங்கதேசம் தொழிலாளர் போராட்டம் தீவீரமடைகிறது.

தனியார் தாராளமயக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் பட்டினியின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள நிலையில் எளிய தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிகக்குறைந்த ஊதியம் பெரும் மக்கள் திரள கலகங்களை உருவாக்கி வருகிறது. மேலும் அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் கூட மூன்றாம் உலக நாடுகள் கடன் சுமையால் தள்ளாட வேண்டிய நிலையை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் பங்காளாதேஷில் ஆயத்த ஆடைத்தொழிலாளர்களின் போராட்டம் தீவீரமடைந்து வருகிறது. சம்பளப் பற்றாக்குறை யால் போராட்டத்தில் ஈடு பட்ட ஆயத்த ஆடைத் தொழி லாளர்கள் மீது வங்கதேசக் காவல்துறை ரப்பர் தோட் டாக்களால் சுட்டது. அரசு ஆதரவுடன் அளிக்கப் பட்ட ஊதிய உயர்வு தொழி லாளர்களை அவமானப் படுத்துவதாக தொழிற்சங் கங்கள் கூறின.சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிடங்களை விட்டு வெளியேறி சாலைக்கு வந் தனர். காவல்துறையுடன் மோதினர். கல்லெறி நடத்தி னர். கூட்டத்தைக் கலைக்க ரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர்ப்புகை குண்டு களையும் காவல்துறை பயன்படுத்தியது என்று காவல்துறை ஆய்வாளர் நசீர் அகமது கூறினார். வங்கதேசத்தில் ஆயத்த ஆடை உற்பத்திமையமான அசுலியாவில் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பணிபுரியும் ஒரு தொழி லாளிக்கு மாதம் ஒன்றுக்கு 23.8 டாலர் வங்கதேச மதிப் பில் 1662 டகா கொடுக்கப் படுகிறது. இதுபோதாது என்று தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன் போராட்டத்தைத் தொடங் கினர். அந்தப் போராட்டம் அரசு அளித்த உறுதியின் பேரில் நிறுத்தப்பட்டது. உலகிலேயே மிகக் குறை வான சம்பளம் இது என் பது குறிப்பிடத்தக்கது.ஊழியர்கள் மாதமொன் றுக்கு 5000 டகா வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆலை முதலாளிகள் 3 ஆயி ரம் டகா அளிக்க முன்வந் துள்ளனர். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோதாது என்று தொழி லாளர்கள் கூறுகின்றனர்.
போராட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கப் போவதாக ஆயத்த ஆடை ஊழியர்கள் ஐக்கிய அமைப் பின் தலைவர் மோஷே ரபா மிஷ் கூறியுள்ளார்.

Exit mobile version