மூன்றாமுலக நாட்டின் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிக்கொழுக்கும் பல்தேசிய நிறுவனனக்கள் அவர்களின் உயிர்கொல்லிகளாகவும் மாறியுள்ளன. பிரித்தானியா முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள ஆடை அங்காடியான பிரை மார்க் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலையும் அந்தக் கட்டத்தில் இயங்கிய முக்கிய நிறுவனங்களில் ஒன்று. நிறுவனங்களின் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் கட்டடத்தின் பாதுகாப்பு குறித்த சோதனை ஒன்றை பங்களாதேஷ் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். பிரைமார்க் போன்ற பல்தேசிய நிறுவனங்கள் தாமே அந்த சோதனையை மேற்கொண்டு கட்டடம் பாதுகாப்பானது என்று உறுதிப்படுதிக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் பிரைமார்க் நிறுவனம் பாதுகாப்புச் சோதனையை நடத்தியதில் கட்டடம் பாதுகாப்பானது என அறிவித்திருந்தது.

மலிவான கூலிகளை மட்டுமே குறியாகக் கொண்ட இந்த நிறுவனங்கள் காலனிய காலத்தில் ஏகாதிபத்தியங்கள் அறிமுகப்பட்டுத்திய ஊழல் லஞ்சம் போன்றவற்றிலும் அதிகமாக இன்று அரசுகளை விலைக்கு வாங்கிக்கொள்கின்றன. பிரித்தானியாவல் வழமை போல சில தன்னார்வ நிறுவனங்கள் பிரைமார்க்கிற்கு எதிராக அறிக்கைகளை விடுத்துள்ளன.